Wednesday, June 5, 2013

கொழும்பில் இருந்து திருச்சி வந்தபோது நடுவானில் விமானத்தில் திடீர் கோளாறு!

Wednesday, June 05, 2013
திருச்சி::இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே வங்காள விரிகுடா கடல் பரப்பிற்கு மேல் விமானம் பறந்து கொண்டிருந்தது. இந்திய எல்லையில் திருச்சி வான் கட்டுப்பாட்டு பிரிவுக்கு அருகில் வந்தபோது விமானத்தை பைலட் மீண்டும் இலங்கை நோக்கி திருப்பினார். அதைக் கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கான காரணம் குறித்து விமான பணியாளர்களிடம் விசாரித்தனர். இதனால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை அடைந்தவுடன், நடுவானில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானம் மீண்டும் இலங்கைக்கே திரும்பி வர நேரிட்டதாக பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த விமானத்தில் இலங்கை செல்வதற்காக 100க்கும் மேற்பட்ட பயணிகள் திருச்சி ஏர்போர்ட்டில் காத்திருந்தனர். ஆனால் விமானம் வராததால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். ஒரு மணி நேரம் தாமதமாக மாற்று விமானம் மூலம் இலங்கையில் இருந்து பயணிகள் திருச்சி அழைத்து வரப்பட்டனர். நடுவானில் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இலங்கையில் இருந்து திருச்சி வந்து கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் விமானம் மீண்டும் கொழும்புக்கே திரும்பி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியில் இருந்து கொழும்புவுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தினமும் 2 முறை விமான சேவை அளிக்கிறது. நேற்று காலை 7.30 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் கொழும்புவில் உள்ள பண்டாரநாயக்கே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டது. விமானத்தில் 120க்கும் அதிகமான பயணிகள் இருந்தனர்.

No comments:

Post a Comment