Monday, June 24, 2013

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகுகளில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்பவர்கள் உண்மையான அகதிகள் அல்லர்: எஞ்சியுள்ள புலிகளே சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபடுகின்றனர்: ஜீ.எல்.பீரிஸ்!

Monday, June 24, 2013
இலங்கை::இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகுகளில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்பவர்கள் உண்மையான அகதிகள் அல்லர். அவர்கள் அனைவரும் தங்கள் பொருளாதாரத்துக்காக இலங்கையிலிருந்து தப்பியோடியவர்கள். தமிழர்கள் மட்டுமன்றி சிங்ளவர்களும் பொருளாதார வளம் கிடைக்குமென்று ஏமாற்றப்பட்டு அவுஸ்திரேலியா செல்ல முயற்சிக்கிறார்கள் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அந்நாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அமைச்சர் பீரிஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
 
யுத்தத்தால் புலிகள் தோற் கடிக்கப்பட்ட பின்னர் எஞ்சியுள்ள சில எல்.ரி.ரி.ஈ யினர் இலங் கைத் தமிழர்களை படகு களில் ஏற்றி மக்களை அவுஸ் திரேலியாவுக்குச் சட்ட விரோத மாகக் ஆட்கடத்தும் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது என்றும் தெரி வித்துள்ளார்.
 
இலங்கை அரசாங்கத் துக்கும், எல்.ரி.ரி.ஈக்கும் இடையிலான யுத்தம் முடிவுபெற்றுள்ள போதிலும் எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளின் வலையமைப்பைச் சேர்ந்தவர்கள் இப்போதும் கூட வெளி நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ள தமிழ் குடும்பங்களை அச்சுறுத்தி பணத்தை அபகரிப்பதுடன், வேறுபல குற்றச்செயல் களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஐரோப்பிய நாடுகளும், வடஅமெரிக்க நாடுகளும் எல்.ரி.ரி.ஈயின் செயற்பாடு களைத் தடைசெய்துள்ள இவ்வேளையில் ஏன் அவுஸ்திரேலியா மாத்திரம் எல்.ரி.ரி.ஈ அமைப்பைத் தடைசெய்ய தயக்கம் காட்டுகிறது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கேள்வி யெழுப்பியுள்ளார்.
 
ஆட்களைச் சட்டவிரோதமாகக் கடத்தும் தொழில் மூலம் எல்.ரி.ரி.ஈயினர் கடந்த காலத்தில் பெரு மளவு வருமானத்தை பெற்றார்கள் என்றும், ஆட்களைக் கடத்துவதை நாம் தனித்து வைத்துப் பார்க்காமல் அதனுடன் வேறுபல குற்றச் செயல்களும் இடம்பெறு வதைக் கூர்ந்து அவதானித்தல் அவசியம். பலவந்தப்படுத்தி பணத்தை அபகரித்தல் மற்றும் போதைவஸ்துக்களின் விற்பனை யிலும் இவர்கள் ஈடுபடுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
 
எல்.ரி.ரி.ஈயினர் அன்று துப்பாக்கியைக் காட்டி மிரட்டியும், மக்களை ஏமாற்றியும் சூறையாடிய பெரும்பாலான பணம் இன்னும் அவர்கள் வசம் இருக்கிறதென்றும், இப்போது அவர்கள் அதனை வைத்து பல சரக்குக் கப்பல்களை வாங்கியிருக்கி றார்கள் என்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தனது பேட்டியில் தெரிவித்தார்.
 
எல்.ரி.ரி.யினருக்கு இப்போது முன்பு இருந்ததைவிட பணவசதி குறைவாக இருந்தாலும், அவர்களின் செலவு பன் மடங்கு இப்போது குறைந்திருக்கிறது என்றும் அவர் கூறினார். இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகுகளில் அவுஸ்திரேலி யாவுக்குச் செல்பவர்கள் உண்மையிலேயே அகதிகள் அல்ல என்று தெரிவித்த பேரா சிரியர் ஜீ.எல்.பீரிஸ், சரியாகக் கூறுவதாயின் அவர்கள் பொருளாதாரக் காரணங்களுக்காக இலங்கையிலிருந்து தப்பியோடியவர்கள் என்றே கூறவேண்டும். அவுஸ்திரேலிய அரசாங்கமும், இலங்கை அரசாங்கமும் சட்டவிரோத குடியேற்றங்களைத் தடுப் பதற்கு எடுத்துவரும் வெற்றிகரமான நடவடிக்கைகளுக்கும் அவர் நன்றிகளைத் தெரிவித்தார்.
 
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் செல்ல எத்தனித்த 88 பேர் இலங்கையின் கடல் எல்லைக்குள் இந்தவாரம் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இப்பணியை இலங்கை கடற்படையினர் வெற்றிகரமாக நடத்துகிறார்கள். இப்போது சுமார் 3000 பேர் அவுஸ்திரேலியாவுக்குத் திருப்பியனுப்பப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்த அவர், இலங்கை திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும் கூறினார். தமிழர்கள் மட்டுமன்றி சிங்களவர்களும் பொருளாதார காரணங்களுக் காக இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவை அடைய முயற்சிக் கிறார்கள்.
 
எல்.ரி.ரி.ஈயுடன் தொடர்புடைய பல குழுக்கள் எங்கள் நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment