Monday, June 24, 2013

வவுனியா றம்பைக் குளம் மகளிர் வித்தியாலய மண்டபத்தில் தொண்டர் ஆசியர்களுக்கு ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு!

Monday, June 24, 2013
இலங்கை::வவுனியா றம்பைக் குளம் மகளிர் வித்தியாலய மண்டபத்தில்     ஞாயிற்றுக்கிழமை  (23)  இடம்பெற்றது வவுனியா மன்னார் முல்லைத்தீவு மாவட்டங்களின் தொண்டர் ஆசியர்களுக்கு ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது

அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண மக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது மட்டுமன்றி அவர்களது இயல்பு வாழ்க்கையை பெற்றுக் கொடுக்கும் முகமாகவே நானும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் ஜனாதிபதி; மகிந்த ராஜபக்ஷ அவர்களது அரசுடன் கைகோர்த்து நிற்கின்றோம். இவ்வாறு நாம் கைகோர்த்து நிற்பதன் ஊடாகவே யாழ்ப்பாணம் கிளிநொச்சி வவுனியா மன்னார் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் எவ்வித பாகுபாடுகளுமின்றி அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை, அரச உத்தியோகத்தர்களுக்கான நியமனங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

இருந்த போதிலும் இவ்வாறான எமது அபிவிருத்தி மற்றும் ஏனைய செயல்களை சில சுயலாப அரசியல்வாதிகள் விமர்ச்சித்தே வருகின்றனர்.

யுத்தகாலத்தின் போது வடமாகாணத்தின் பல பகுதிகளும் பெரும் அழிவை சந்திருந்த நிலையில் தற்போது அரசின் நிதியுதவியுடனும் ஏனைய உதவித்திட்டங்கள் ஊடாகவும் பல்வேறு வகைகளில் அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.

இதனிடையே 1987 ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அப்போது முதல் ஆதரித்து வரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதனடிப்படையிலேயே அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென்பதை வலியுறுத்தி வருகின்றார் என்றும் சுட்டிக்காட்டினார்.

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சத்தியசீலன தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

இதில் நியமனப் பத்திரங்களை அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, றிசாட் பதியூதின்,  ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் வழங்கி வைத்தனர்.

நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் வன்னி மாவட்ட இணைப்பாளர் சுமதிபால பிரேமரட்ன, ஜனாதிபதியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் கனகரட்னம், வவுனியா மன்னார் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் ஈ.பி.டி.பியின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட கல்வித்துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment