Monday, June 03, 2013
இலங்கை::வட மாகாண சபைக்கு தேர்தல் நடத்த வேண்டிய தேவை மக்களை விடவும் வேறு தரப்பினருக்கே உள்ளதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை::வட மாகாண சபைக்கு தேர்தல் நடத்த வேண்டிய தேவை மக்களை விடவும் வேறு தரப்பினருக்கே உள்ளதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் களுத்துறை நகர மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கில் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்ற கேள்வியையே இந்தியா அனைத்து சந்தர்ப்பங்களிலும் தொடுத்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தேர்தலை நடத்த வேண்டிய தேவை வடக்கில் உள்ள மக்களை விட அமெரிக்காவிற்கும் மேற்குலக நாடுகளுக்கும் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பிராந்தியத்தின் அதிகாரம் பொருந்திய நாடு என்ற வகையில் இந்தியாவுக்கும் அந்த தேவை உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்...
இன்று காலை களனி ஸ்ரீ புஞ்ஞானந்த பெளத்த மத்திய நிலையத்தில் மத அனுஷ்டானங்களுடன் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் மகஜரில் கையெழுத்து பெறும் நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.
அதன் பின்னர் கடவத்தை, யக்கல, பஸ்யால, வரக்காபொல, பொல்கஹாவெல, குருநாகலை வரை ஊர்வலமாகச் சென்று அங்கு அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறும். இவ் ஊர்வலம் செல்லும் அனைத்து நகரங்களிலும் மக்களிடம் கையெழுத்துகள் பெறப்படவுள்ளன.
கையெழுத்து பெறும் ஊர்வலம் தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறுமென்றும் தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது:
வட மாகாண சபை தேர்தல் வேண்டாம் என வலியுறுத்தி மக்களிடம் கையொப்பங்களைக் பெறும் நடவடிக்கையை தேசிய சுதந்திர முன்னணி இன்று ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது!
காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் வட மாகாண சபை தேர்தல் வேண்டாம் என வலியுறுத்தி மக்களிடம் கையொப்பங்களைக் பெறும் நடவடிக்கையை தேசிய சுதந்திர முன்னணி இன்று ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை களனி ஸ்ரீ புஞ்ஞானந்த பெளத்த மத்திய நிலையத்தில் மத அனுஷ்டானங்களுடன் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் மகஜரில் கையெழுத்து பெறும் நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.
அதன் பின்னர் கடவத்தை, யக்கல, பஸ்யால, வரக்காபொல, பொல்கஹாவெல, குருநாகலை வரை ஊர்வலமாகச் சென்று அங்கு அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறும். இவ் ஊர்வலம் செல்லும் அனைத்து நகரங்களிலும் மக்களிடம் கையெழுத்துகள் பெறப்படவுள்ளன.
கையெழுத்து பெறும் ஊர்வலம் தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறுமென்றும் தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது:

No comments:
Post a Comment