Monday, June 3, 2013

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கேரள கஞ்சாவை கொண்டுவரும் பிரதான முகவர் உள்ளிட்ட மூவர் மன்னாரில் கைது!

Monday, June 03, 2013
இலங்கை::இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கேரள கஞ்சாவை கொண்டுவரும் பிரதான முகவர் உள்ளிட்ட மூவர் நேற்று மன்னாரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
 
அவர்களிடமிருந்த 200 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளும் 30 கிலோகிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
 
அவர்களிடம் இருந்து 3 கையடக்கத் தொலைபேசிகள், 2 மோட்டார் சைக்கிள்கள், 38 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
 
இவர்கள் மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
 
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விசேட பொலிஸ் குழுவினரால் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
 
கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் நாட்டின் பல பகுதிகளுக்கும் கேரளா கஞ்சாவை விநியோகிப்பவர் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment