Thursday, June 27, 2013
இலங்கை::ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்சானியா மற்றும் சிசெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இன்று வியாழக்கிழமை காலை புறப்பட்டுச் சென்றுள்ளார்.
தன்சானியாவை சென்றடைந்த ஜனாதிபதிக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு நாடுகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ மேற்கொள்கின்ற முதல் விஜயம் என்பதுடன் இலங்கையின் ஜனாதிபதி ஒருவர் மேற்கொள்கின்ற முதல் விஜயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது, தன்சானியா ஜனாதிபதி ஜகாயா மிரிஷோ கிக்வெட் மற்றும் சீசெல்ஸ் ஜனாதிபதி ஜேம்ஸ் எலிக்ஸ் மிஷெல் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில ஜனாதிபதி ஈடுபடவுள்ளார்.
கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்த சீசெல்ஸ் ஜனாதிபதி, தனது நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த இரு நாடுகளும் பல சர்வதேச பொது மன்;றங்களில் இலங்கைக்கு ஒத்துழைப்பு நல்கியுள்ளன. 2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 11ஆவது விசேட அமர்வின்போது சீசெல்ஸ் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தது.
தன்சானியா தலைநகரான தார் எஸ் சலாம் நகரில் நடைபெறவுள்ள சர்வதேச அறிஞர் பங்காளர் உரையாடலிலும் சீசெல்சில் ஜனாதிபதி தேசிய பேரவை கூட்ட அமர்விலும் வியாபார மன்றக் கூட்டத்திலும் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.







No comments:
Post a Comment