Monday, June 17, 2013

இந்தியாவுடனான உடன்படிக்கைகளை இலங்கை மீறுகிறது: (புலிகளின் அடிவருடி) சுமந்திரன்!

Monday, June 17, 2013
சென்னை::இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 6 உறுப்பினர்கள் இந்திய அரச பிரமுகர்களை இன்று தொடக்கம் சந்திக்கவுள்ளனர்.
 
இலங்கை அரசாங்கத்தின் சமகால செயற்பாடுகள், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் படி மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குதல் போன்ற விடயங்கள் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்படவுள்ளது.
 
நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் நாளையதினம் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்திக்கவுள்ளனர்.
 
இதனிடையே, இன்றையதினம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனை இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
 
இந்தநிலையில், இந்திய எக்ஸ்பிரஸ் நியுஸ் சேவிஸ் ஊடகத்திற்கு அளித்த செவ்வியில், நாடாளுமன்ற உறுப்பினர் (புலிகளின் அடிவருடி)எம்.ஏ.சுமந்திரன், இலங்கையானது இந்தியாவுடனான உடன்படிக்கைகளை மீறும் வகையில் செயற்படுவதாக கூறியுள்ளார்.
 
இதுகுறித்த விடயங்களை இந்திய தரப்பின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களின் நிலைப்பாடுகளை பெற முனைவதாக அவர் தெரிவித்தார்.
 
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தில் இருந்த இரண்டு விடயங்கள் அண்மையில் அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய நீக்கப்பட்டமை தொடர்பிலும் சுமந்திரன் கருத்து வெளியிட்டார்.
 
இந்தநிலையில், சட்டமூல திருத்தம் ஒன்று கடந்த வாரம் நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது.
 
நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் குறித்தும் அவர் எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு கருத்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment