Monday, June 3, 2013

திருகோணமலை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள்: கிழக்கு மாகாண முதலமைச்சரால் கௌரவிப்பு!

Monday, June 03, 2013
இலங்கை::இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற இளைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (01) திருகோணமலை விவேகானந்தா மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தில் வெற்றிபெற்ற 11 இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் அவர்களினால் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் திருமலை மாவட்டத்திலுள்ள 11 பிரதேசசெயலக பிரிவுகளிலிருந்தும் தலா இருவர் வீதம் 22 இளைஞர்கள் "பிரதேசத்தின் சிறந்த இளைஞர்கள்" என்ற சிறப்பு கௌரவத்தினை பெற்றனர். 

No comments:

Post a Comment