Friday, June 14, 2013

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பில்' அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுடன் இன்று வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்!


Friday, June 14, 2013
இலங்கை::'எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பில்' அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுடன் இன்று வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது வட மாகாண தேர்தலுக்கு முன்னதாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

வட மாகாண சபைத்தேர்தலின் போது பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்களை கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தவேண்டும்.

அத்துடன், தேர்தலுக்கு முன்னர் வடக்கு மாகாணத்தில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தும் வகையில் சிவில் பிரதிநிதியொருவரை ஆளுநராக நியமிக்கவேண்டும். என்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளைச்சேர்ந்த பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment