Friday, June 14, 2013
நியூயார்க்::2028-ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை சீனாவை தாண்டும்' என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக மக்கள் தொகை குறித்த அறிக்கையை ஐ.நா. சபை நியூயார்க்கில் நேற்று வெளியிட்டது. அதன்படி தற்போது சர்வதேச அளவில் மக்கள் தொகை 720 கோடியாக உள்ளது. 2025-ம் ஆண்டில் அது 810 கோடியாக உயரும். அதே நேரத்தில் 2050-ம் ஆண்டில் 960 கோடியாக மாறும். இந்த மக்கள் தொகை பெருக்கம் விகிதம் வளரும் நாடுகளில் ஏற்படும்.
இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா மற்றும் நைஜீரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் 2 மடங்கு அதிகரிக்கும். இந்தியாவை பொறுத்தவரை இந்த நூற்றாண்டில் மக்கள் தொகை பெருக்கம் பெருமளவில் அதிகரிக்கும். அதாவது 160 கோடியை தாண்டும். அதே நேரத்தில் சிறிதளவு குறைந்து 150 கோடியாக இருக்கும்.
சீனாவை பொறுத்தவரை 2030-ம் ஆண்டு வரை மக்கள் தொகை பெருக்கம் குறையும். 2100-ம் ஆண்டில் அதாவது இந்த நூற்றாண்டு இறுதியில் சீராகி 110 கோடியாக மாறும் என கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தற்போதுள்ள நிலவரப்படி வருகிற 2028-ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகையில் சீனாவை தாண்டும் என்றும் ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment