Wednesday, June 5, 2013

ஈரான் கரன்சி மீது அமெரிக்கா தடை: ஈரான் மீது, ஒன்பதாவது முறையாக, அமெரிக்கா பொருளாதார தடை!

Wednesday, June 05, 2013
வாஷிங்டன்::ஈரான் மீது, ஒன்பதாவது முறையாக, அமெரிக்கா பொருளாதார தடையை அமல்படுத்தியுள்ளது.
 
ஈரான், அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக அமெரிக்க சந்தேகிக்கிறது. இது தொடர்பான பேச்சு வார்த்தைக்கு, ஈரான் மறுப்பு தெரிவித்ததால், அந்நாட்டின் மீது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், பொருளாதார தடையை விதித்துள்ளன.
 
ஈரானிடமிருந்து, கச்சா எண்ணெய் வாங்குவதற்கு, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும், தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், குறைந்த அளவு எண்ணெய் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த வாரம், ஈரான் நாட்டு பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் மீது, தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே ஈரான் கரன்சியான, ரியாலை, அந்நாட்டுக்கு வெளியே பரிவர்த்தனை செய்வதற்கு, அமெரிக்கா நேற்று, புதிய தடையை விதித்துள்ளது. இந்த தடையினால், ஈரானின் பொருளாதாரம், மேலும் நெருக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment