Wednesday, June 26, 2013

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் கொழும்பில் இன்று சந்திப்பு!

Wednesday, June 26, 2013
 இலங்கை::தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் கொழும்பில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பேராசிரியர் சர்வேஷ்வரன் ஆகியோரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாக பிரபா கணேசன், அக்கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி சுரேஷ் கங்காதரன், பிரதித் தலைவர் பி.வை.பிரசாத் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பின் போது அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டடாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

No comments:

Post a Comment