Wednesday, June 12, 2013

மாகாணசபை முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும்: ஜனாதிபதியின் ஆலோசகர் அருண் தம்பிமுத்து!

Wednesday,June 12, 2013
இலங்கை::மாகாணசபை முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும்  ஜனாதிபதியின் ஆலோசகர் அருண் தம்பி
முத்து தெரிவித்துள்ளார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தொடர்ந்தும் பிரிவினைவாத கொள்கைகளையும் கோட்பாடுகளையுமே பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
 
மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் அவசியமில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அது காவல்துறையின் சுயாதீனத்தன்மையை பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டு வருவதாக அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.
 
 

No comments:

Post a Comment