Tuesday, June 11, 2013

மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படை பிரதானி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு!

Tuesday June 11, 2013
இலங்கை::மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படை பிரதானி மேஜர் ஜெனரல் அஹமட் ஷியாம் திங்கட்கிழமை (10) பிற்பகல் இராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய - பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷவை சந்தித்துரையாடினார்.

பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படை பிரதானியும் அமைச்சின் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷவும் இருதரப்பு நட்புறவுகள் குறித்தும், இந்த நட்புறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
 
இருவரும் நினைவுச்சின்னங்களையும் பரிமாறிக் கொண்டனர். இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயும் இந் நிகழ்வில் கலந்துக் கொண்டார்.

No comments:

Post a Comment