Tuesday, June 11, 2013

வடக்கு சிறுவர்களுக்கான இராணுவத்தினரின் உதவி!

Tuesday June 11, 2013
இலங்கை::இலங்கை இராணுவத்தின் சமூக நலன்புரித் திட்டங்களை விரிவுபடுத்தும் முகமாக மருதங்கேனி அரச வைத்திய சாலையில் சிறுவர்களுக்கான போசாக்கு உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம் பெற்றது.
 
 இந் நிகழ்வை கட்டைக்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவத்தின் 55 ஆவது படைப் பிரிவினர் ஏற்பாடு செய்ததுடன் இத்திட்டத்திற்காக கொழும்பு டெல்மகே சந்தைப்படுத்தல் நிறுவனம் நிதியுதவி வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
 
இதன் போது 1.1 மில்லியன் ரூபாய் பெறுமதியான யாழ். சுகாதார பிரிவினரால் பரிந்துறைக்கப்பட்ட 3000 போசாக்கு உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இதேவேளை கடந்த வாரம் இராணுவத்தின் 521 ஆம் படைப் பிரிவினால் பருத்தித் துறை தும்பலை சிவப்பிரகாஷ் பாடசாலையில் பல் மருத்துவ முகாமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
இந் நிகழ்வானது பாடசாலை மாணவர்களின் சுகாதார நலனை விருத்தி செய்யும் நோக்குடன் மந்திகை வைத்தியசாலை மற்றும் நடமாடும் பல் சிகிச்சை பிரிவு என்பவற்றின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
இதன் போது 378 மாணவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் இனம்காணப்பட்ட 72 மாணவர்களுக்கு வைத்தியர்களால் தேவையான சிகிச்சையும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment