Thursday, June 27, 2013
சுவீடன்::சட்டவிரோதமான முறையில் சுவீடனில் தங்கியுள்ள இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்.
இலங்கையின் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுவீடன் அரசாங்கம் அறிவித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் சுவீடனில் தங்கியிருக்கும் அகதிக் கோரிக்கையாளர்களே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளனர்.
விசேட விமானமொன்றின் மூலம் இவர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்.
சுவீடனில் தங்கியுள்ள இலங்கை அகதிக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கணக்கெடுப்பு ஒன்றும் நடத்தப்படவுள்ளது.
இந்த நடவடிக்கைகள் தொடர்பில் சுவீடன் அரசாங்கம் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளது.
போர் இடம்பெற்ற காலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை அகதிக் கோரிக்கையாளர்கள் சுவீடனில் தஞ்சமடைந்துள்ளனர்.

No comments:
Post a Comment