Sunday, June 23, 2013

தூதுவர் நியமனம் தொடாபில் கனடாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது!?

Sunday, June 23, 2013
இலங்கை::தூதுவர் நியமனம் தொடாபில் கனடாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் மற்றும் கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஆகிய நியமனங்களில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.
 
குறித்த இரண்டு நாடுகளும் உயர்ஸ்தானிகர் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
 
கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெலி வைட்டிங் கடந்த மூன்று மாதத்திற்கு முன்னதாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் இதுவரையில் அவரது நியமனத்தை அரசாங்கம் உறுதி செய்யவில்லை. ஷெலி வைட்டிங் தற்போது மீளவும் கனடா திரும்பியுள்ளார்.
 
அமெரிக்காவிற்கான இலங்கை பிரதித் தூதுவரான எசல வீரக்கோன், கனேடிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது பதவியும் இன்னமும் கனேடிய அரசாங்கத்தினால் உறுதிப்படுத்தப்படவில்லை.
 
இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை நடாத்துவதற்கு கனடா எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment