Thursday, June 27, 2013
இலங்கை::புலிகளின் அரசியல் பிரிவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய தலைவராகவும் புதிய பிரபாகரனாகவும் கத்தோலிக்கத் திருச்சபையின் மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு செயற்பட்டுவருகின்றார் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
தமிழர் என்பதால் மன்னார் ஆயர் இலங்கைக்கு எதிராக பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயற்படுகின்றார். எனவே இவருக்கு எதிராக குரல் கொடுக்க கத்தோலிக்கத் திருச்சபையில் உள்ள சிங்கள ஆயர்கள் அனைவரும் முன்வரவேண்டும். தேசப்பற்றுமிக்க கத்தோலிக்கத் திருச்சபையின் சிங்கள ஆயர்கள் அனைவரும் நாடு எதிர்கொண்டுள்ள இந்த தீர்க்கமான கட்டத்தில் எம்முடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என்றும் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
ஒற்றையாட்சியை பலப்படுத்துவோம் மாகாண சபை முறைமையை ஒழிப்போம் என்ற தொனிப்பொருளில் பௌத்த அமைப்புக்களின் ஒன்றியமான மாகாண சபை முறைமையினை ஒழிப்பதற்கான அமைப்பு நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்..

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் நாடு பிரிவதை தடுக்க முடியாமல் போய்விடும்: பௌத்த அமைப்புக்களின் ஒன்றியம்!
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் நாடு பிரிவதை தடுக்க முடியாமல் போய்விடும். எனவே 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நீக்கிவிடவேண்டும். அல்லது அதில் உள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் உள்ளிட்ட ஐந்து விடயங்கைள அவசர சட்டமூலம் ஒன்றை கொண்டுவந்து நீக்கிவிடவேண்டும் என்று பௌத்த அமைப்புக்களின் ஒன்றியமான மாகாண சபை முறைமையினை ஒழிப்பதற்கான அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சர்வதேசத்தை திருப்திபடுத்துவதற்காக 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் வடக்குத் தேர்தலை நடத்தினால் அதனால் ஏற்படும் அழிவுகளுக்கு தற்போதைய அரசியல்வாதிகளே பொறுப்புக்கூறவேண்டும். இந்தியாவின் யுத்த பலத்தை பிரயோகித்து இலங்கை மக்களின் இணக்கமின்றி திணிக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் எமக்குத் தேவையில்லை என்றும் மாகாண சபை முறைமையினை ஒழிப்பதற்கான அமைப்பின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிப்பதற்கு இந்தியாவின் விருப்பத்தை கேட்கவோ அவர்களின் அழுத்தங்களுக்கு உட்படவோ வேண்டிய அவசியமில்லை. 13 ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அகற்றும்வரை உயிர்த்தியாகத்துடன் செயற்பட பிக்குககள் தயார் என்றும் அமைப்பு சுட்டிக்காட்டியது.
13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக ஆளும் கட்சிக்குள்ளிருந்து குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் இடதுசாரி அரசியல்வாதிகளின் எதிர்கால அரசியலை அடுத்த தேர்தலின்போது வீடு வீடாக சென்று மக்களின் ஆதரவுடன் முடிவுக்கு கொண்டுவருவோம். இதற்கு நாங்கள் தயாராகிவிட்டோம் என்றும் அமைப்பின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
ஒற்றையாட்சியை பலப்படுத்துவோம் மாகாண சபை முறைமையை ஒழிப்போம் என்ற தொனிப்பொருளில் பௌத்த அமைப்புக்களின் ஒன்றியமான மாகாண சபை முறைமையினை ஒழிப்பதற்கான அமைப்பு நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் தேசிய சங்க சம்மேளனத்தின் தலைவர் ரஜவத்தே ஒப்ப தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் மேற்கண்ட விடயங்களை வலியுறுத்தினர்.

No comments:
Post a Comment