Monday, June 10, 2013

இலங்கையில், ராணுவத்தை விட, புலிகளால், தமிழர்கள் அதிகம் பேர் கொல்லப்பட்டனர்: தமிழக காங்., தலைவர் ஞானதேசிகன்!

Monday, June 10, 2013
ராமநாதபுரம்::இலங்கையில், ராணுவத்தை விட,  புலிகளால், தமிழர்கள் அதிகம் பேர் கொல்லப்பட்டனர்,ராமநாதபுரத்தில் நடந்த, காங்., ஊழியர் கூட்டத்தில், அவர் பேசியதாவது:-
ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுகின்றனர். இப்பிரச்னையில் நிரந்தர தீர்வு காண, காங்., தலைவர் சோனியாவிடம், பலமுறை முறையிட்டுள்ளேன். இலங்கை தமிழர்களுக்கு, இந்தியா சார்பில், புது படகுகள், வலை தயாரிப்பு ஆலை, 150 பஸ்கள், 79 பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை சீரமைப்பு என, பல திட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளன. தமிழர் பகுதியில், ரயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், 50 ஆயிரம் வீடுகள் கட்டி தர முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்தால், தமிழர்கள் தான் பாதிக்கப்படுவர்.
போரில், புலிகளால், இலங்கை தமிழர்கள் அதிகம் பேர் கொல்லப்பட்டனர்' என, ஐ.நா., சபை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வைகோ, சீமான் ஆகியோர், இலங்கை தமிழர்களை வைத்து, கட்சியை வளர்க்கின்றனர். கடந்த காலங்களில், தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டால், உடனடியாக விடுவிக்கப்படுவர்.
 
ஆனால், இலங்கையில் இருந்து வருபவோர் மீது, தாக்குதல் நடத்தப்படுவதால், தமிழக மீனவர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது.
தமிழக மீனவர் பிரச்னைக்கு, காங்., அரசு, நிந்தர தீர்வு பெற்றுத்தரும். இலங்கையில், சிறைபிடிக்கப்பட்ட 49 மீனவர்கள், விடுவிக்கப்படுவர். போதைப் பொருள் கடத்தியதாக, இலங்கை சிறையில் வாடும், ஐந்து மீனவர்கள், விரைவில் விடுதலையாவர். இவ்வாறு அவர் கூறினார்.
 .
இலங்கையில், ராணுவத்தை விட,  புலிகளால், தமிழர்கள் அதிகம் பேர் கொல்லப்பட்டனர்:  தமிழக காங்., தலைவர் ஞானதேசிகன்!

No comments:

Post a Comment