Wednesday, June 5, 2013

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்!

Wednesday, June 05, 2013
இலங்கை::யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்டு வாழும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (மே 31) நடைபெற்றது. 511 படைப்பிரிவின் கீழ் உள்ள 5ஆம் படைப்பிரிவின் ஏற்பாட்டில் 'நெதர்லாந்து இலங்கை நாள்' அமைப்பின் நிதியுதவியுடன் இவ் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
 
5 ஆவது பட்டாலியன் படைப்பிரிவின் தளபதி கேணல் ஜீ.ஏ.எல் கீஸ்ரிசிறி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க கலந்துகொண்டு வாழ்வாதார உதிவிகளை வழங்கிவைத்தார்.
இதன்போது, 17 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா செலவில் 30 பேருக்கு இந்த வாழ்வாதார உதிவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 10 மாடுகள், 6 ஆடுகள், 11 தையல் இயந்திரம், 2 நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் 100 கோழிகள் என்பன வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இந் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. ஹெட்டியராட்சி, நெதர்லாந்து இலங்கை நாள் அமைப்பின் தலைவர், 511 ஆவது படைப்பிரின் தளபதி உட்பட படை உயர் அதிகாரிகள், பொது மக்கள உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment