Wednesday, June 5, 2013

பிரித்தானிய தம்பதி கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் லண்டனில் கைது!

Wednesday, June 05, 2013
பிரித்தானிய தம்பதி கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். 22 வயதான இளைஞர் ஒருவரை பிரித்தானிய ஸ்கொட்லாண்ட்யார்ட் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 
சென்னையில் வைத்து குறித்த பிரித்தானிய தம்பதியினர் கடத்தப்பட்டிருந்தனர். இந்தக் கடத்தல் சம்பவமானது லண்டனிலும் சென்னையிலும் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட பிரித்தானிய தம்பதியினர் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது,
 
லண்டனின் டோர்செட் பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரை பிரித்தானிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்கேத்தின் பேரில் இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட ஒன்பது பேரை சென்னை காவல்துறையினர் ஏற்கனவே கைது செய்திருந்தனர்.

No comments:

Post a Comment