Saturday, June 1, 2013

ஐக்கிய நாடுகள் சபையின் குடிபெயர் பணியாளர்களுக்கான குழுவின் தலைவராக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவு!

Saturday, June 01, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் சபையின் குடிபெயர் பணியாளர்களுக்கான குழுவின் தலைவராக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
 
இந்த பதவிக்கான வாக்கெடுப்பு நியூயோர்க் நகரிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.
 
இதன்போது அதிகப்படியான வாக்குகளை பெற்று பிரசாத் காரியவசம் அந்த குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதாக வெளிவிவவகார அமைச்சின் பொது தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ரொட்னி பெரேரா கூறியுள்ளார்.
 
இந்த குழு 14  நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நிபுணர்களை உள்ளடக்கியதாக நிறுவப்பட்டுள்ளது.
 
இதற்கமைய குழுவின் தலைவராக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அடுத்து நான்கு ஆண்டு காலத்திற்கு செயற்படவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
 
உலகளாவிய ரீதியில் தற்போது சுமார் 175 மில்லியன் குடிபெயர் பணிப்பாளர் இருப்பதோடு அவர்கள் தத்தமது நாடுகளின் பொருளாதார மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றனர்.

No comments:

Post a Comment