Thursday, June 13, 2013

நெடுந்தீவுப் பகுதியில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!

Thursday, June 13, 2013
இலங்கை::யாழ்.நெடுந்தீவுப் பகுதியில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஊர்காவற்துறைப் பொலிஸார் இன்று  தெரிவித்துள்ளனர்.
 
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-
 
நீண்ட நாளாக படைமுகாமில் இருக்கும் 19 வயது நிரம்பிய இராணுவ இளம் நங்கையை காதலித்து வந்துள்ளதாகவும், அந்த குறித்த இராணுவ பெண் இன்னொரு இராணுவ சிப்பாயுடன்  தொடர்புகளை பேணிவந்துள்ளதாக காதலனான இராணுவச் சிப்பாய்க்கு தெரியவந்துள்ளது.
 
இது தொடர்பாக அந்த பெண்ணிடம் விசாரித்த போது குறிதத் பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். தான் அவ்வாறான தொடர்புகளைப் பேணவில்லை என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
 
இதனை அடுத்து இந்த விடயத்தை குறித்த சிப்பாய் விசாரிக்க தொடங்கினார்.
 
இதனையடுத்து நேற்று இரவு படைமுகாமில் தன்னைத் தானே ரி 56 துப்பாய்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக ஊர்காவற்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
தற்கொலை செய்துகொண்ட இராணுவச் சிப்பாய் நுகொகொட பகுதியைச் சேந்த எஸ்.எம்.பி. பிஸந்த தர்சன  என்பவராவார்.
 
இச் சம்பவம் தொடர்பாக இராணுவப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

No comments:

Post a Comment