Wednesday, June 12, 2013

வட மாகாணசபைத் தேர்தலர் ஒத்தி வைக்கப்படக் கூடிய சாத்தியம்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday,June 12, 2013
இலங்கை::வட மாகாணசபைத் தேர்தலர் ஒத்தி வைக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 13ம் திருத்தச் சட்டம் மாகாணசபை முறைமை போன்றன தொடர்பில் நிலவி வரும் சர்ச்சைகள் காரணமாக வட மாகாணசபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
 
பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைத்து இந்தப் பிரச்சினைகளுக்கு அதன் மூலம் தீர்வு காணப்பட்டு அதன் பின்னர் தேர்தல் நடைபெறக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவான தரப்பினரது கருத்துக்களையும் எதிரான தரப்பினரது கருத்துக்களையும் ஆராய்ந்து இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு வழியமைக்கும் என அவர் நம்பிக்கை  வெளியிட்டுள்ளார்.
 
வெகு விரைவில் பாராளுமன்றத் தெரிவுக்குழு நிறுவப்படும் என  அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பேசும் மக்களுக்கு 13ம் திருத்தச் சட்டம் மிகவும் அவசியமானது என  அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

No comments:

Post a Comment