Wednesday, June 12, 2013

இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிப்பதனை உறுதிப்படுத்த வேண்டும்: அமெரிக்கா!

Wednesday,June 12, 2013
நியூயோர்க்::இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படுவதனை உறுதி செய்ய வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
 
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக யுத்தக் குற்றச் செயல்களுக்கான அமெரிக்கப் பிரதிநிதி ஸ்டீவன் ரெப் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை விவகாரங்கள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் எவ்வாறான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஆகஸ்ட் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
 
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படாமை வருத்தமளிப்பதாகக் குறிப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment