Thursday, June 13, 2013

கட்சியை விட்டு செல்பவர்கள் துரோகிகள் பிரேமலதா ஆவேசம்!

Thursday, June 13, 2013
ஈரோடு::தேமுதிக கொள்கை பரப்பு செயலாளரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான வி.சி சந்திரக்குமார் இல்ல நிகழ்ச்சி ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-
 
தமிழகத்தில் ஜெயலலிதா அரசு என்ன சாதனை செய்திருக்கிறது? அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளதா, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி உள்ளதா, தக்காளி 80 ரூபாய்க்கும், வெங்காயம் 100 ரூபாய்க்கும் விற்கிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதும் நமதே என்று கூறி வருகிறார்கள். நீங்கள் செய்த ஒரே சாதனை டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையை ஆண்டுக்கு 22 ஆயிரம் கோடி வருவாய் இலக்கை நிர்ணயித்தது மட்டுமே. விவசாய பிரச்னை, தொழிலாளர் பிரச்னை, மின்வெட்டு பிரச்னை உள்ளிட்ட எந்த ஒரு பிரச்னையிலும் அதிமுக அக்கறை காட்டுவதில்லை. 29 எம்எல்ஏக்களை அவர்களுக்கு பிச்சையாக கொடுத்தோம் என கூசாமல் கூறி வருகிறார். 151 எம்எல்ஏக்கள் இருந்தும் தேமுதிகவை சேர்ந்த எம்எல்ஏக்களை ஏன் குறி வைக்கிறீர்கள்?

கட்சியை விட்டு செல்பவர்களை விஜயகாந்த் தடுக்கவில்லை. ஏற்கனவே 6 பேர் சென்றுவிட்டனர். தற்போது மேலும் ஒருவர் சென்று விட்டதாக கூறுகின்றனர். கட்சியை விட்டு சென்ற ஒரு எம்எல்ஏவை பற்றியும் இதுவரை விஜயகாந்த் எதுவும் பேசவில்லை. ஏனென்றால் அவர்கள் துரோகிகள். இன்னும் 15 நாட்களில் 3 எம்எல்ஏக்கள் போவார்கள் என்ற தகவலையும் பரப்பி வருகிறார்கள்.

எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்கி விடலாம். மக்கள் ஆதரவை வாங்க முடியாது. வரும் தேர்தலில் தமிழக மக்கள் அனைவரும் அதிமுகவுக்கு எதிராக வாக்களித்து ஜெயலலிதாவின் எண்ணம் தவறு என புரிய வைப்பார்கள். இவ்வாறு பிரேமலா பேசினார்.

No comments:

Post a Comment