Thursday, June 13, 2013

லண்டன் ஓட்டலில் கலக்கல் டெக்னாலஜி வெடிகுண்டு மட்டுமல்ல.. டிரோன் மூலம் இட்லி, தோசையும் பறக்கும்!!!

Thursday, June 13, 2013
லண்டன்::ஓட்டலில் உணவு ஐட்டம் ஆர்டர் செய்தால், வழக்கமாக சப்ளையர்தான் எடுத்து வருவார். இங்கிலாந்தில் உள்ள யோ சுஷி ஓட்டலில், மினி டிரோன் ஒன்று டிபன் ஐட்டங்களை சுமந்துகொண்டு டேபிளுக்கே பறந்து வருகிறது. ஐ&பேட் உதவியுடன் இயக்கப்படும் இது பறந்து வந்து டிபன் சப்ளை செய்வது வாடிக்கையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஓட்டல் நிறுவனம் ‘யோ சுஷி’. தலைநகர் லண்டன் மட்டுமின்றி நாட்டின் பல இடங்களிலும் ரஷ்யா, ஐக்கிய அரபு குடியரசு உள்ளிட்ட நாடுகளிலும் இதன் கிளைகள் உள்ளன. இதன் லண்டன் கிளையில் சமீபத்தில் ‘டிரோன் சர்வீஸ்’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உணவு வகைகள் ஆர்டர் செய்தால் சப்ளையர் எடுத்து வரமாட்டார். அதற்கு பதிலாக, மினி ஹெலிகாப்டர் இன்ஜின் பொருத்தப்பட்ட மினி டிரோன் வாகனம் ஒன்று இறக்கைகளை சுழற்றியபடி ஜிவ்வென்று பறந்து நம் டேபிளுக்கு அருகே சுழன்றபடி நிற்கும். அல்லது டேபிளில் தரையிறங்கும். ஐட்டங்களை நாம் எடுத்துக் கொண்ட பிறகு திரும்பிவிடும். 2 நவீன கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஓட்டல் ஊழியர் ஒருவர் ஐ&பாட் உதவியுடன் இதை இயக்குகிறார். 25 கி.மீ. வேகத்தில் இது பறக்கிறது.

இதுபற்றி யோ சுஷி ஓட்டல் அதிகாரிகள் கூறுகையில், ‘உலகம் முழுவதும் எங்கள் ஓட்டல்கள் 70 இடங்களில் உள்ளது. கன்வேயர் பெல்ட் மூலம் சப்ளை செய்வது, ரோபோ மூலம் சப்ளை செய்வது ஆகிய முயற்சிகளை தொடர்ந்து, தற்போது மினி டிரோன் உதவியுடன் சப்ளையை தொடங்கியிருக்கிறோம். அசம்பாவிதங்கள் எதுவுமின்றி, இது சிறப்பாக நடந்தால் மற்ற கிளைகளிலும் அறிமுகப்படுத்தப்படும்’ என்றனர்.

No comments:

Post a Comment