Sunday, June 16, 2013

உடனடியாக சுயாதீன ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட வேண்டும்: எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ!

Sunday, June 16, 2013
இலங்கை::உடனடியாக சுயாதீன ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ கோரியுள்ளார்.

கொழும்பு ஜயவர்த்தன கேந்திரத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதனிடையே, 17வது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சகல சீர்த்திருத்தங்களுக்கும் முன்னர், இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறயினும், 13வது அரசியலமைப்பு சீர்த்திருத்திற்கு எதிரானவர்கள் அதிக வலுவைக் கொண்டவர்கள் அல்லவென அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம், 13வது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் தொடர்பாக கருத்து வெளியிட்டு மக்களின் பிரச்சினைகளை கைவிடுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தாநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment