Sunday, June 16, 2013
ஈரானில், அதிபராக இருந்த, மகமூது அகமது நிஜாத்தின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல், நேற்று முன்தினம் நடந்தது. ஈரானின் அணுசக்தி கொள்கை காரணமாக, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், அந்த நாட்டின் மீது, கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், இந்த தேர்தல் முடிவு, உலகம் முழுவதும், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதில், ஈரானின் மூத்த அரசியல்வாதியும், அந்த நாட்டின், பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவருமான, ஹசன் ரவ்ஹானி, 64, டெஹ்ரான் மேயர், முகமது பகெர் காலிபாப் உள்ளிட்ட, ஆறு பேர் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான ஓட்டுகள், நேற்று எண்ணப்பட்டன. இரவு வரையிலான நிலவரப்படி, மொத்தம் பதிவான ஓட்டுகளில், 50 சதவீத ஓட்டுகளுக்கு மேல் பெற்று, ஹசன் ரவ்ஹானி, வெற்றியின் விளிம்பில் உள்ளார். ஓட்டு எண்ணிக்கை முடிவில், அதிக ஓட்டு வித்தியாசத்தில், ரவ்ஹானி வெற்றி பெறுவார் என்றும், ஈரானின் அடுத்த அதிபராக, அவர் பதவியேற்பார் என்றும், செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஹசன் ரவ்கானி, சீர்திருத்தம் மற்றும் மிதவாத கொள்கைகளின் ஆதரவாளராக கருதப்படுகிறார்.
அணுசக்தி கொள்கை தொடர்பாக, மேற்கத்திய நாடுகளுக்கும், ஈரானுக்கும், கருத்து வேறுபாடு எழுந்தபோது, மேற்கத்திய நாடுகளுடன் பேசுவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக, ரவ்ஹானி நியமிக்கப்பட்டார். இதனால், மேற்கத்திய நாடுகளின் பிரதிநிதிகளுடன், ரவ்ஹானிக்கு, சுமுக உறவு இருப்பதாக, ஈரான் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரவ்ஹானி கூறியதாக, பி.பி.சி., நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி: மேற்கத்திய நாடுகளுடனான, ஈரானின் வெளியுறவு கொள்கை, முற்றிலும் சீர்குலைந்து போயுள்ளது. இதில், முன்னேற்றம் காணும் வகையில், அந்த நாடுகளுடன், பேச்சுவார்த்தை நடத்துவேன். ஈரானில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள, அரசியல் கைதிகளை விடுவிக்க, உத்தரவிடுவேன். இவ்வாறு, ரவ்ஹானி கூறியுள்ளதாக, அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஹ்ரான்::ஈரானில் நடந்த அதிபர் தேர்தலில், மிதவாத மற்றும் சீர்திருத்த கொள்கை
ஆதரவாளராக கருதப்படும், ஹசன் ரவ்ஹானி, அதிக ஓட்டுகளை பெற்று, வெற்றி பெறும்
நிலையில் உள்ளார். மேற்கத்திய நாடுகளுடன், பேச்சுவார்த்தையை துவங்கப் போவதாக, அவர்
தெரிவித்துள்ளார்.
ஈரானில், அதிபராக இருந்த, மகமூது அகமது நிஜாத்தின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல், நேற்று முன்தினம் நடந்தது. ஈரானின் அணுசக்தி கொள்கை காரணமாக, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், அந்த நாட்டின் மீது, கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், இந்த தேர்தல் முடிவு, உலகம் முழுவதும், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதில், ஈரானின் மூத்த அரசியல்வாதியும், அந்த நாட்டின், பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவருமான, ஹசன் ரவ்ஹானி, 64, டெஹ்ரான் மேயர், முகமது பகெர் காலிபாப் உள்ளிட்ட, ஆறு பேர் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான ஓட்டுகள், நேற்று எண்ணப்பட்டன. இரவு வரையிலான நிலவரப்படி, மொத்தம் பதிவான ஓட்டுகளில், 50 சதவீத ஓட்டுகளுக்கு மேல் பெற்று, ஹசன் ரவ்ஹானி, வெற்றியின் விளிம்பில் உள்ளார். ஓட்டு எண்ணிக்கை முடிவில், அதிக ஓட்டு வித்தியாசத்தில், ரவ்ஹானி வெற்றி பெறுவார் என்றும், ஈரானின் அடுத்த அதிபராக, அவர் பதவியேற்பார் என்றும், செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஹசன் ரவ்கானி, சீர்திருத்தம் மற்றும் மிதவாத கொள்கைகளின் ஆதரவாளராக கருதப்படுகிறார்.
அணுசக்தி கொள்கை தொடர்பாக, மேற்கத்திய நாடுகளுக்கும், ஈரானுக்கும், கருத்து வேறுபாடு எழுந்தபோது, மேற்கத்திய நாடுகளுடன் பேசுவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக, ரவ்ஹானி நியமிக்கப்பட்டார். இதனால், மேற்கத்திய நாடுகளின் பிரதிநிதிகளுடன், ரவ்ஹானிக்கு, சுமுக உறவு இருப்பதாக, ஈரான் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரவ்ஹானி கூறியதாக, பி.பி.சி., நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி: மேற்கத்திய நாடுகளுடனான, ஈரானின் வெளியுறவு கொள்கை, முற்றிலும் சீர்குலைந்து போயுள்ளது. இதில், முன்னேற்றம் காணும் வகையில், அந்த நாடுகளுடன், பேச்சுவார்த்தை நடத்துவேன். ஈரானில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள, அரசியல் கைதிகளை விடுவிக்க, உத்தரவிடுவேன். இவ்வாறு, ரவ்ஹானி கூறியுள்ளதாக, அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment