Wednesday, June 05, 2013
இலங்கை::இளைஞர் கொள்கை பிடகடனத்துக்கான கருத்துக் கணிப்பொன்று இலங்கையில் முதற்தடவையாக இம்மாதம் 9ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நாடுமுழுவதிலும் நடைபெறும்.
இலங்கை::இளைஞர் கொள்கை பிடகடனத்துக்கான கருத்துக் கணிப்பொன்று இலங்கையில் முதற்தடவையாக இம்மாதம் 9ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நாடுமுழுவதிலும் நடைபெறும்.
இதற்காக பல்வேறு சமூகத்தினரின் கருத்துக்களும் பெறப்படும் என்று இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
நேற்று முந்தினம் அமைச்சில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்படி தகவலை தெரிவித்தார்.
இலங்கை வரலாற்றிலேயே முதற்தடவையாக தொழில் நுட்பக்கல்வி உயர்வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .
தொழில் பயிற்சிக்கு இந்த தொழில்நுட்பக்கல்வி மிகவும் முக்கியமாகும்.பல்வேறு தடைகளையும் முறியடித்து எமது ஜனாதிபதி தொழில்நுட்பக்கல்விக்கு உரிய இடத்தைப் பெற்றுத் தந்துள்ளார். எனவே ஜனாதிபதிக்கு நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment