Wednesday, June 5, 2013

லங்கா ஈ நியூஸ் ஊடகத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.!

Wednesday, June 05, 2013
இலங்கை::லங்கா ஈ நியூஸ் ஊடகத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் எக்நெலிகொட, பிரான்ஸில் தற்போது வாழ்ந்து வருவதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
 
பிரகீத் எக்னெலிகொட தனது மனைவியுடன் பிரான்ஸில் வசித்து வருவதாகவும் இது பிரான்ஸில் உள்ள இலங்கையர்களுக்கு நன்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
பாராளுமன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
இதற்கு முன்னர் தற்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், எக்நெலிகொட வெளிநாடொன்றில் வாழ்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வுகளில் அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர், நீதிமன்றில் ஆஜராகி சட்சியளித்த போது எக்கொலிகொட எங்கிருக்கின்றார் என்பதனை கடவுள் மட்டுமே அறிவார் மொஹான் பீரிஸ் தெரிவித்திருந்தார்.
 
கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் திகதி எக்நெலிகொட காணாமல் போயிருந்தார்.

No comments:

Post a Comment