Tuesday, June 11, 2013

இலங்கையர்களுக்கு வீசா வழங்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த பிரித்தானியா தீர்மானித்துள்ளது!

Tuesday June 11, 2013
இலங்கை::இலங்கையர்களுக்கு வீசா வழங்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த பிரித்தானியா தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 24ம் திகதி முதல் இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. பிரித்தானியாவிற்கு விசிட் வீசா பெற்றுக் கொள்ள விரும்புவோர் புத்தம் புதிய திட்டமொன்றின் கீழ் விண்ணப்பிக்க முடியும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
 
மேலதிகக் கட்டணமாக 10,000 இலங்கை ரூபாவினை செலுத்துவதன் மூலம் ஐந்து வேலை நாட்களுக்குள் வீசா விண்ணப்பத்திற்கான ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, உரிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் வீசா வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளது. 
 
மாணவர் வீசாக்களின் அடிப்படையில் விண்ணப்பிப்போருக்கு இது பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் விரைவு கதியில் வீசா வழங்கும் சேவையானது வரையறுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதனால், பயனர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள முடியும் எனக் குறிப்பிடப்படுகிறது. றறற.எளைய4ரம.கஉழ.பழஎ.ரம  என்ற இணைய முகவரிக்கு சென்று பதிவுகளை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment