Tuesday, June 11, 2013

விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு பிரிட்டிஷ் ஏர்வேஸ் சர்வீஸ் ரத்து 274 பேர் உயிர் தப்பினர்!

Tuesday June 11, 2013
மீனம்பாக்கம்::விமானம் ஓடுபாதையில் ஓட தொடங்குவதற்கு முன்பாக விமானத்தை விமானிகள் சோதனை செய்தனர். அப்போது பெரிய அளவில் இயந்திர கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்தார். உடனே விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கதவுகள் திறக்கப்பட்டு விமான நிலைய பொறியாளர் குழுவினர் ஏறி பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். 11 மணி வரை சரி செய்தபாடில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள், ‘6 மணி நேரத்துக்கும் மேலாக எங்களை அடைத்து வைத்துள்ளீர்களே, நியாயமா?’ என விமான நிலைய பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை உயரதிகாரிகள் சமாதானப்படுத்தினர்.

பயணிகள் அனை வரும் கீழே இறக்கப்பட்டு சென்னையில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். ‘நாளை அதிகாலை விமானம் புறப்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் விமான கோளாறை விமானி கண்டுபிடித்ததால் பயணிகள் 274 பேரும் அசம்பாவிதத்தில் சிக்காமல் தப்பினர்.

சென்னையில் இருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இன்று அதிகாலை 5.20 மணிக்கு புறப்பட வேண்டும். இதில், 265 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர். அவர்கள் அதிகாலை 2 மணிக்கு விமான நிலையத்துக்கு வந்து விட்டனர். சுங்க சோதனை, குடியுரிமை, பாதுகாப்பு சோதனையை முடித்து விட்டு 4.30 மணிக்கு ஏறிவிட்டனர். சிப்பந்திகள் 9 பேர் உள்பட மொத்தம் 274 பேர் புறப்பட தயாராக இருந்தனர்.

No comments:

Post a Comment