Monday, June 10, 2013
இலங்கை::வட மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் வகையில் பட்டதாரிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று முன் தினம் (08) வவுனியா கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
அமைச்சர் றிஷாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக், கல்வி அமைச்சின் செயலாளர் கோத்தாபய ஜயரத்ன, வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி உட்பட அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
அத்துடன் காரியாலய தொழிலாளிகளுக்கும் இதன்போது நியமனம் வழங்கப்பட்டது. குறிப்பாக கல்வி, விவசாயம், சுகாதாரம் ஆகிய துறைகளில் உள்ள வெற்றிடங்களுக்கே இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.



No comments:
Post a Comment