Wednesday, June 5, 2013

இந்திய எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சி பிரதிநிதிகள் குழுவினரும்,:நியுசிலாந்து வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினரும், நேற்று இரவு இலங்கை வருகை!

Wednesday, June 05, 2013
இலங்கை::நியுசிலாந்து வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினரும், இந்திய எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சி பிரதிநிதிகள் குழுவினரும் நேற்று இரவு இலங்கை வந்துள்ளனர்.
 
நியுசிலாந்து வெளிவிவகார அமைச்சர் மரேமெக்கலின் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட குழுவினரும் இந்திய ராஜ்சபா எதிர் கட்சி தலைவர் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினரும் நேற்று இரவு 10.25 மணியளவில் நாட்டுக்கு வந்ததாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
 
பொது நலவாய நாடுகளின் அரச தலைவர்களது மாநாடு, இன ஒன்றுமை மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பிலும், நியுசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் தொடர்பிலும் கலந்துரையாடும் பொருட்டே நியுசிலாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்துள்ளார்.
 
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்ந்து பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கியஸ்தர்களிடம் அறிவிப்பதற்காகவே இவர்கள் வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து பாரதிய ஜனதாக் கட்சி பிரதிநிதிகள் குழு கலந்துரையாடவுள்ளது.
 
இந்தக் குழுவினர் வட பகுதிக்கும் விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
 
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதாக் கட்சியின் பிரதிநிதிகள் குழுவில் 6 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
 
இதனிடையே, இந்திய ராஜ் சபையின் பிரதி தலைவர் ரவி ஷங்கர் பிரசாத் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் பிரதிநிதிகள் குழுவும் இலங்கை வந்துள்ளது.
 
இந்திய பிரதிநிதிகள் தமது விஜயத்தின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகள் பலரை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
 
அத்துடன், இந்த குழு வடக்கிற்கும் விஜயம் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment