Friday, June 21, 2013

இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய புலிகளின் தலைவர் சீலன் என்பவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது!

Friday, June 21, 2013
இலங்கை::இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்த புலிகளின் தலைவர் சீலன் என்பவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
 
குறித்தந பருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் அனுராதபுர நீதிமன்றில் நடைபெற்று வந்தது.
 
சந்தேக நபரை அந்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்வதாக வடமத்திய மாகாண உயர் நீதிமன்ற நீதவான் சுனந்த குமார ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.
 
2008ம் ஆண்டில் வில்பத்து காட்டுப் பகுதியில் அரச படையினர் மீது தாக்குதல் நடத்தியதாக சீலன் மீது, சட்ட மா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
சந்தேக நபர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல் நிலையை கருத்திற்கொண்டு அவரை விடுதலை செய்யுமாறு அவரது சட்டத்தரணி கோரிக்கை விடுத்திருந்தார்.
 
 

No comments:

Post a Comment