Tuesday, June 4, 2013

சீனப் பிர­ஜை­யிடம் கைப்­பற்­றப்­பட்ட 72 இலட்சம் ரூபா அர­சு­ட­மை­யா­னது: சுங்கத் திணைக்­க­ளத்தின் பொலிஸ் ஊடகப் பிரிவு!

Tuesday, June 04, 2013
இலங்கை::சீனா பிரஜை ஒரு­வ­ரி­ட­மி­ருந்து கைப்­பற்­றப்­பட்ட பணம் அர­சு­ட­மை­யாக்­கப்­பட்­டுள்­ள­தாக சுங்கத் திணைக்­க­ளத்தின் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

பாங்கொக் நோக்கிச் செல்­ல­வி­ருந்த நிலையில் கடந்த வாரம் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் கைது செய்­யப்­பட்ட சீனப் பிரஜை ஒரு­வ­ரி­ட­மி­ருந்து 72 இலட்சம் ரூபா கைப்­பற்­றப்­பட்­டி­ருந்­தது.

இந்தப் பணம் தொடர்பில் அவர் சரி­யான தக­வல்­களை வழங்­காமை கார­ண­மா­கவே அவர் தடுத்து வைக்­கப்­பட்டு விச­ரா­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்தார் என தெரிவித்­துள்ள சுங்கத் திணைக்­க­ளத்தின் பொலிஸ் ஊடகப் பிரிவு, இதன் பின்னர் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­க­ளை­ய­டுத்து அவ­ரி­ட­மி­ருந்த பணம் அரசுடமையாக்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார் எனக் கூறியுள்ளது.
 

No comments:

Post a Comment