Monday, June 24, 2013

சுவிஸ் வங்கியில் பணம்: இந்தியாவுக்கு 70-வது இடம்!!

Monday, June 24, 2013
ஜூரிச்::சுவிஸ் வங்கியில் டெபாசிட் வைத்துள்ளவர்கள் பட்டியலில் இந்தியா பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது, இங்கிலாந்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
 
சுவிட்சர்லாந்து மத்திய வங்கி, உலக அளவில் பணம் டெபாசிட் செய்துள்ள நாடுகளின் பட்டியலை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
 
இதில் முதலிடத்தில் பிரிட்டன்,அமெரிக்கா, வெஸ்‌ட் இண்டீஸ், ஹாங்காங் ஆகியன முதல் பத்து இடங்களை பிடித்துள்ளது. இதில் இந்தியா தொடர்ந்து பின்னோக்கி 70 -வது இடத்தை பிடித்துள்ளது.
 
இந்தியர்களின் பணம் ரூ. 9 ஆயிரம் கோடி அளவுக்கு குறைந்துள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment