Sunday, June 9, 2013

புலிகள் அமைப்பு கொழும்பு நகரில் பாரிய அழிவை ஏற்படுத்துவதற்காக மறைத்து வைத்த அதிசக்தி வாய்ந்த 500 கிலோ எடை கொண்ட வெடிக்குண்டுகளை கண்டுப்பிடிப்பதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்!

Sunday, June 09, 2013
இலங்கை::புலிகள் அமைப்பு கொழும்பு நகரில் பாரிய அழிவை ஏற்படுத்துவதற்காக வன்னி இராணுவ நடவடிக்கை நடைபெற்ற போது, கொழும்பில் மறைத்து வைத்த அதிசக்தி வாய்ந்த 500 கிலோ எடை கொண்ட இரண்டு வெடிக்குண்டுகளை கண்டுப்பிடிப்பதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
 
இந்த சக்தி வாய்ந்த குண்டுகள் தொடர்பான தகவல்களை பாலசுப்ரமணியம் என்ற 

புலி உறுப்பினர், பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் தெரிவித்துள்ளார்.  அவர் தற்போது கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
 
குண்டுகளை செயலிழக்க செய்யும் குழுவினருடன், 1000 கிலோ எடை கொண்ட இந்த குண்டுகள் இருக்கும் இடங்களை தேடி வருவதாக பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கொழும்பில் புலிகளின் முக்கோண பிரதேசம் என அடையாளப்படுத்தப்படும் பிரதேசத்தில் இந்த குண்டுகள் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment