Thursday, June 27, 2013

அமெரிக்க ராணுவத்தில், 2017க்குள், 80 ஆயிரம் வீரர்களை குறைக்க திட்டம்!

Thursday, June 27, 2013
வாஷிங்டன்::அமெரிக்க ராணுவத்தில், 2017க்குள், 80 ஆயிரம் வீரர்களை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிக செலவினங்களை குறைக்கும் வகையில், அமெரிக்க ராணுவத்தில் ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இது குறித்து, அமெரிக்க ராணுவ தளபதி, ரேமான்ட் ஓடிர்னோ கூறியதாவது: அமெரிக்காவில், நியூயார்க் உலக வர்த்தக கோபுரம் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பிறகு, ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில், ஏராளமான ராணுவ வீரர்கள், பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 
ஜெர்மன் நாட்டின், ஏழு பகுதிகளில், 4,500 வீரர்கள் பணியில் உள்ளனர். ஆப்கானிஸ்தானிலிருந்து, ஏராளமான வீரர்கள், அடுத்த ஆண்டு, தாயகம் திரும்ப உள்ளனர். எனவே, ராணுவ செலவை குறைக்கும் வகையில், வரும், 2017ம் ஆண்டுக்குள், 80 ஆயிரம் வீரர்களை குறைக்க உள்ளோம். இதன் மூலம், தற்போதுள்ள, 5.7 லட்சம் வீரர்கள், 4.9 லட்சமாக குறைக்கப்படுவர். இவ்வாறு ரேமான்ட் கூறினார்.

No comments:

Post a Comment