Tuesday, June 11, 2013

கடந்த 1988 மற்றும் 1989 ஆண்டு காலப்பகுதியினில், காணாமல் போன உறவுகள் குறித்து முறைப்பாடு!

Tuesday June 11, 2013
இலங்கை::மாத்தளை மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக பாதிப்படைந்தவர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு.
கடந்த 1988 மற்றும் 1989 ஆண்டு காலப்பகுதியினில், காணாமல் போன தமது உறவுகள் குறித்து சுமார் 70 குடும்பத்தவர்கள் தமது முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.
 
மக்கள் விடுதலை முன்னணியினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்தே அவர்கள் இந்த முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் மாத்தளை மாவட்ட இணைப்பாளர் கமகெதர திசாநாயக்க கூறினார்.
 
சட்ட வல்லுனர்கள் தற்போது, பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மாத்தளை மருத்துவமனையை அண்டிய பிரதேசத்தில் கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக பூமியினை அகழ்ந்த போது 150 க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டன.
 
எச்சத்தை பரிசோதித்த நிபுணர்கள், அவை 1986 முதல் 1990 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியினில் புதைக்கப்பட்டிருக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment