Sunday, June 09, 2013
இலங்கை::நாட்டின் ஐக்கியத்துவத்தை பாதுகாக்கும் பொருட்டே 13ம் திருத்தம்: அமைச்சர் டலஸ் அழகப்பெரும!
இலங்கை::நாட்டின் ஐக்கியத்துவத்தை பாதுகாக்கும் பொருட்டே 13ம் திருத்தம்: அமைச்சர் டலஸ் அழகப்பெரும!
நாட்டின் ஐக்கியத்துவத்தை பாதுகாக்கும் பொருட்டே அரசாங்கம் 13ம் திருத்தச் சட்டத்தில் சீர்த்திருத்தங்களை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடமாகாணசபைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து 13ம் திருத்தச்சட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்படாலும், நாட்டினையும், நாட்டு மக்களையும் பித்துவிடாமல் பாதுகாக்கும் பொருட்டே, தற்போது அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment