Wednesday, June 05, 2013
இலங்கை::13ம் திருத்தச் சட்டத்தை திருத்துவது தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் நாளைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 13ம் திருத்தச் சட்டத்தை திருத்தியமைப்பது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றைய தினம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கலந்தாலோசித்துள்ளனர். அலரி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது

இந்த சந்திப்பின் போது 13ம் திருத்தச் சட்டத்தின் சில சரத்துக்களை மாற்றியமைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாணசபை சட்டங்களில் திருத்தம் செய்வதற்கு அனைத்து மாகாண சபைகளினதும் ஒப்புதல் பெற்றுக் கொள்ளும் தற்போதைய நடைமுறையில் மாற்றம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதாவது பெரும்பான்மையான மாகாண சபைகளின் ஒப்புதலுடன் திருத்தங்களை அமுல்படுத்தக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட உள்ளது.
மேலும், இரண்டு மாகாணசபைகளை இணைக்கக் கூடிய வகையில் தற்போது காணப்படும் சரத்தினை முற்று முழுதாக நீக்குவதற்கு தீர்மானிக்க்பபட்டுள்ளது. இந்த இரண்டு திருத்தங்களே முதல் கட்டமாக அமுல்படுத்தப்படவுள்ளது. காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பிலும் கட்சித் தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
13ம் திருத்தச் சட்டத்தின் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைத்து அதன் மூலம் தீர்வு வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யோசனை முன்வைத்துள்ளார்.
இந்தப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி பங்கேற்காவிட்டாலும், 13ம் திருத்தச் சட்ட மூலத்தில் செய்யப்பட வேண்டிய திருத்தங்களை அடிப்படையாகக் கொண்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு பணிகளை முன்னெடுக்கும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment