Saturday, June 22, 2013
இலங்கை::13ஆவது சட்டத்திருத்தம் பற்றி முடிவெடுக்கும் பாரிய பொறுப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவே இதுபற்றி இறுதி முடிவெடுக்கும். நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் இதில் கலந்து கொண்டு பிரச்சினையை சுமுகமாக தீர்த்து வைப்பதற்கு உதவ வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களையும் இலத்திரனியல் ஊடகங்களின் செய்திப்பிரிவு பொறுப்பாசிரியர்களையும் அலரிமாளிகையில் சந்தித்த போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, பொருளாதார அபிவிருத்தி துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஊடக தகவல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளரும், ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவருமான மொஹான் சமரநாயக்க, ஊடக தகவல்துறை அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் உட்பட மேலும் பலரும் கலந்து கொண்டார் கள்.
இந்திய அரசாங்கம் 13ஆவது திருத்தப் பிரேரணை குறித்து அதிருப்தி அடைந்திருப்பதாக எமக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
அதைப்பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகிaர்கள் என்று ஜனாதிபதி யிடம் ஓர் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி; எங்களைப் பொறுத்தமட்டில் அவ்விதம் எத்தகைய கருத்துக்களையும் இந்தியா வெளியிடவில்லை என்றுதான் கூற வேண்டும்.இலங்கை, இந்திய நட்புறவு சீர்குலைந்துவிட்டதென்று கூறுகிறார்களே என்ற இன்னொரு கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, அதை யார் சீர்குலைத்ததென்று நாம் கண்டுபிடிக்க வேண்டுமென்று ஹாஸ்யமாக பதிலளித்தார்.
அதைத் தொடர்ந்து இன்னுமொரு சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்களைப் பார்த்து; வடமேல் மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரம் கொடுத்திருந்தால் இப்போது என்ன நடந்திருக்கும் என்று ஜனாதிபதி புன்முறுவல் பூத்தபடி கூறினார்.
நாம் வடமாகாண தேர்தலை மட்டும் நடத்துவதில் ஆர்வம் கொண்டிருக்க வில்லை. நாட்டின் தென்பகுதியிலும் இதுபோன்ற பெரும் பிரச்சினைகள் இருக்கின்றன. எனவே, நாம் வடபகுதிக்கு மாத்திரம் இந்தத் தேர்தலை நடத்தப்போகிறோம் என்று எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. நாம் இந்த மூன்று மாகாணங்களின் தேர்தலையும் நடத்தவுள்ளோம் என்றும் ஜனாதிபதி கூறினார்.
இலங்கைக்கு எதிரான எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்களின்போலிப் பிரசாரங்களை முறியடிப்பதற்கு சர்வதேச ரீதியில் நீங்கள் எதனை செய்ய உள்Zர்கள் என்று கேட்டதற்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், நாம் எமது வெளிநாட்டு தூதரகங்கள் மூலம் அந்நாட்டு அரசாங்கங்களுக்கு உண்மை நிலையை எடுத்துரைத்து வருகிறோம். ஆயினும் எங்கள் தரப்பிலும் சில குறைபாடுகள் இருப்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமென்றார்.
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இலங்கைக்கு வந்து 13ஆவது திருத்தச் சட்டம் பற்றி அரசாங்கத் தலைவருடன் பேசப் போகிறாரே, அதைப்பற்றி தகவல் களை எடுத்துரையுங்கள் என்று ஓர் ஊடகவியலாளர் கேட்ட போது, வருடாந்தம் இதுபோன்ற கூட்டங்கள் ஒரு தடவை மாலைத்தீவு குடியரசிலும் இன்னுமொரு தடவை இந்தியாவிலும் அடுத்த தடவை இலங்கையிலும் அரச அதிகாரிகள் மட்டத்தில் நடைபெறும். சிவசங்கர் மேனன் அதுபோன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே இலங்கை வருகிறார் என்று ஜனாதிபதி தெரிவித்தார். 13ஆவது திருத்தச் சட்டமூலம் ஒரு வெள்ளை யானை என்று கூறுகிறார் களே, அதைப்பற்றி என்ன நினைக்கிaர்கள் என்று ஓர் ஊடகவியலாளர் கேட்ட போது, 13ஆவது திருத்தச் சட்டம் ஒரு வெள்ளை யானையாக இருந்தால் கூட அதனை நாம் கொன்றுவிட முடியாது. அதனை வைத்து நாம் வேலை வாங்கப் பழகிக் கொள்ள வேண்டுமென்று ஜனாதிபதி பதிலளித்தார்.
ஊடகங்களும் சிறு சிறு பிழைகளை மேற்கோள் காட்டி அரசாங்கத்தை அடித்து பலவீனப்படுத்தவே பார்கின்றன என்று தெரிவித்த ஜனாதிபதி, பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து கருத்துக்களை முன்வைத்து சுமுகமான தீர்வொன்றை ஏற்படுத்த வேண்டும். இந்தப் பொறுப்பு அரசாங்கக் கட்சிக்கு மட்டுமல்ல, சகல அரசியல் கட்சிகளுக்கும் இருக்கிறதென்று கூறினார்.


No comments:
Post a Comment