Friday, June 14, 2013
இலங்கை::அமைச்சர் அதாவுல்லாவுடன் இணையம் சற்றுநேரத்திற்கு முன் தொடர்கொண்டபோது இன்று வியாழக்கிழமை அமைச்ரவையில் நடைபெற்ற 13 திருத்த சட்டமூலம் தொடர்பில் அமைச்சர் அதாவுல்லா விளக்கம் வழங்கினார்.
இலங்கை::அமைச்சர் அதாவுல்லாவுடன் இணையம் சற்றுநேரத்திற்கு முன் தொடர்கொண்டபோது இன்று வியாழக்கிழமை அமைச்ரவையில் நடைபெற்ற 13 திருத்த சட்டமூலம் தொடர்பில் அமைச்சர் அதாவுல்லா விளக்கம் வழங்கினார்.
அவர் மேலும் கூறியதாவது:-
ஆரம்பம் முதலே வடக்கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டிருந்ததை நான் எதிர்த்தேன். அந்த மாகாணங்கள் இரண்டும் பிரிக்கப்பட்டதையடுத்து அதன் பலன்களை இன்று மக்கள் அனுபவிக்கின்றனர். இரு மாகாணங்களிலும் அபிவிருத்தி முன்னெடுக்கப்படுகிறது. இதனால் அங்குவாழும் சமூகங்கள் பயன்பெறுகின்றன.
இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றஅமைச்ரவை கூட்டத்தில் 2 மாகாணங்கள் இணங்குமிடத்து, அந்த 2 மாகாணங்களும் இணைந்துகொள்ள முடியுமென்பது குறித்த விவகாரம் கலந்துரையாடப்பட்டது. அதற்குத்தான் நான் எதிர்ப்பு வெளியிட்டேன். வடக்குகிழக்கும் மீண்டும் இணைக்கப்படடக்கூடாது என்பது எமது நிலைப்பாடு. அதனால் அங்கு வாழும் சமூகங்களுக்கு பாதிப்பே ஏற்படும். எனவேதான் அதனை நான் எதிர்த்தேன் என்றார்.

No comments:
Post a Comment