Saturday, May 4, 2013

தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற நான்கு பங்காளி கட்சிகளின் கூட்டம் நேற்று இடம்பெற்றது!

Saturday, May 04, 2013
இலங்கை::தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற நான்கு பங்காளி கட்சிகளின் கூட்டம் நேற்று இடம்பெற்றது!
 
தமிழீழ விடுதலை இயக்கம்;, தமிழர் விடுதலைக்கூட்டணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் என்பன இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டன.
 
இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட்டது.
 
எவ்வாறாயினும் இந்த விடயத்தில் மன்னார் மாவட்ட கத்தோலிக்க ஆயர் ராயப்பு ஜோசப் எடுத்து வருகின்ற முயற்சிகள் இந்த கூட்டத்தின் போது வரவேற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
அவரது முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் எதிர்வரும் 13ம் திகதி நடைபெறவுள்ள கட்சி கூட்டம் வரையில் பொறுத்திருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment