Saturday, May 4, 2013

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொள்வதா? இல்லையா என்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லை: பிரித்தானியா!

Saturday, May 04, 2013
லண்டன்::இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொ
ள்வதா? இல்லையா என்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லை என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது
 
பிரித்தானிய அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள் காட்டி 'த கார்டியன்" இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
 
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டினை இலங்கையில் நடத்துவதற்கு ஏற்கனவே கடந்த 2009 மற்றும் 2011ம் ஆண்டுகளில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாடுகளின் போது தீர்மானிக்கப்பட்டிருந்தது.
 
இந்;த மாநாடு இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கு சிறந்த வாய்ப்பாகவும் காணப்படுகிறது என்று குறித்த பேச்சாளர் தெரிவித்துள்ளார்
 
எனினும் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் இன்னும் இறுதி தீர்மானத்துக்கு வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்..
 
பிரித்தானியாவில் இருந்து எதிர்வரும் மாதங்களில் இலங்கையர்கள் நாடுகடத்தப்படவுள்ளனர்!
 
பிரித்தானியாவில் இருந்து எதிர்வரும் மாதங்களில் மேலும் சில இலங்கை தமிழர்கள் நாடுகடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது
 
பிரித்தனிய குடிவரவுத்துறை அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
 
யுத்தம் நிறைவடைந்த பின்னர், கடந்த 2009ம் ஆண்டு 504 பேரும், 2010ம் ஆண்டு 608 பேரும் 2011ம் ஆண்டில் 865 பேரும் கடந்த 2012 ஆண்டு 717 பேரும் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர்.
 
எனினும் எதிர்வரும் மாதங்களில் நாடுகடத்தப்படவுள்ளவர்களின் குறிப்பான எண்ணிக்கை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை
 
இது தொடர்பில் பிரித்தானிய குடிவரவுத்துறை அதிகாரிகள் பரிசீலனை செய்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment