Friday, May 17, 2013

வட மாகாண மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!:-மாநகர சபையால் மறுசீரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்ட யாழ்.மணிக்கூட்டுக் கோபுரம் மீளத் திறந்து வைப்பு!

Friday, May 17, 2013
இலங்கை::வட மாகாண மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் சில பகுதிகளில் மீளவும் மீனபிடியில் ஈடுபட தேவையான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சிவிலியன் மீன்பிடிப் படகுகளை மீட்பது தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடக் கூடியவர்கள் மீதே மக்கள் கூடுதல் நம்பிக்கை வைக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் மீனவப் பிரதிநிதிகளை சந்தித்து பேசிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
 மாநகர சபையால் மறுசீரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்ட யாழ்.மணிக்கூட்டுக் கோபுரம் மீளத் திறந்து வைக்கப்பபு!
 
மாநகர சபையால் மறுசீரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்ட யாழ்.மணிக்கூட்டுக் கோபுரம் மீளத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் மேற்படி நிகழ்வு  (16) இடம்பெற்றது.

முன்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றி வைக்கப்பட்டது.

தொடர்ந்து வட மாகாண ஆளுநர் நாடாவை வெட்டி திறந்து வைத்ததுடன் நினைவுப் பெயர்ப்பலகையும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

யாழ்.மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேவையிலீடுபடும் ஒட்டோக்களுக்கு அதிதிகளால் ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டன.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பணிப்புரைக்கமைவாக யாழ்.மாநகர சபையால் 34 இலட்சம் ரூபா செலவில் மணிக்கூட்டுக் கோபுரம் மறுசீரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளதுடன், அதைச் சூழவுள்ள மூன்று பிரதான வீதிகளிலும் வீதிசுற்றுக்கள் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், உள்ளுராட்சி ஆணையாளர் ஜெகூ,யாழ்.மத்திய கல்லூரி அதிபர் எழில்வேந்தன், யாழ்ப்பாண பிரதேச செயலர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம், யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ன, மாநகர ஆணையாளர் பிரணவநாதன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்), உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் உடனிருந்தனர்.  

No comments:

Post a Comment