Friday, May 17, 2013
இலங்கை::முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இலங்கை::முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் திகதி இந்தத் தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. புலிகளின் பெண் தற்கொலைப் போராளி ஒருவர் இந்தத் தாக்குதலை நடத்தியிருந்தார்.கோட்டே பிரதேசத்தில் அமைந்துள்ள சரத் பொன்சேகாவின் அலுவலகத்தில் புலனாய்வுப் பிரிவினர் வாக்கு மூலமொன்றை பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதுடன், 27 பேர் காயமடைந்திருந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் சரத் பொன்சேகா படுகாயமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment