Tuesday, May 7, 2013

வட மாகாண சபை மற்றும் ஏனைய தேர்தல்கள் தொடர்பில் பொதுமக்களை தெளிவு படுத்தும் விரிவான வேலைத்திட்டம் ஒன்றை தேர்தல் செயலகமும், பெப்ரல் அமைப்பும் இணைந்து ஆரம்பிக்கவுள்ளன!

Tuesday, May 07, 2013
இலங்கை::வட மாகாண சபை மற்றும் ஏனைய தேர்தல்கள் தொடர்பில் நடமாடும் வேலைத்திட்டம்
 
 வட மாகாண சபை மற்றும் ஏனைய தேர்தல்கள் தொடர்பில் பொதுமக்களை தெளிவு படுத்தும் விரிவான வேலைத்திட்டம் ஒன்றை தேர்தல் செயலகமும், பெப்ரல் அமைப்பும் இணைந்து ஆரம்பிக்கவுள்ளன.
 
2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலை பதிவு செய்யும் நோக்கில் எதிர்வரும் ஜுன் முதலாம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள வாக்காளர் தினத்தில் பணிகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டிஆராய்ச்சி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
 
தொடர்ந்து நடமாடும் தெளிவு படுத்தல் நடவடிக்கைகளையும், தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொடுக்கும் பணிகளையும் மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
 
இதுகுறித்த உயர்மட்ட தேர்தல் செயலக அதிகாரிகளுடனான சந்திப்பொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment